⚫💉😲ஜேர்மனியில் ஏற்பட்ட புதுவித தடுப்பூசி? கலக்கத்தில் அரசு!

ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக தாதி ஒருவரிடம் இருந்து சேலைனை செலுத்திக்கொண்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வட ஜேர்மனியில் உள்ள 8000 பேரை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

ப்ரைஸ்லேண்ட் தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் தாதி ஒருவர் இவ்வாறு தடுப்பூசிக்கு பதிலாக சேலைனை செலுத்தியுள்ளதாகவும் அதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முதலில் உப்புத்தன்மைக் கொண்ட சொலுஷனை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆறு பேருக்கு செலுத்தியுள்ளாக சந்தேகிக்கப்பட்டது.ஆனால் அதிக ஆபத்து என பட்டியல்படுத்தப்பட்ட 70 வயதுக்க மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வைரஸை பரப்பும் நோக்கில் 40 வயதுடைய தாதி சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் சுகாதார திட்டங்கள் குறித்து தவறனா தகவல் பரப்பியுளளமையும் தெரியவந்துள்ளது. பைஸர் மற்றும் பயோன்டெக் தடுப்பூசிகளுக்கு பதிலாகவே சேலைன் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் ஆறு பேருக்கு சேலைன் செலுத்தியதை குறித்த தாதி ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறிருக்கையில் தடுப்பூசிக்கு எதிராக ஜேர்மனியில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.