முக்கிய செய்தி!! அரசாங்கம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட தீர்மானத்தில் அரசாங்கத்துக்கு தொடர்பில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்தில் அரசாங்கம் கொள்கை முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு யுத்த நினைவுச்சின்னத்தை அழித்து பின்னர் அதை புனரமைப்பதற்கான முடிவு பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அதிகாரிகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தநிலையில் யுத்த நினைவுச்சின்னம் இலங்கையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருந்தார்.

யுத்த நினைவுச்சின்னம் 2018 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதுடன் பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள் என்றும் அமரதுங்க குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை பல்கலைகழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் கட்டுவதற்கு துணைவேந்தர் நேற்றையதினம் அடிகல் நாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.