காதலுக்காக உயிரை மாய்த்துக்கொண்ட 24 வயது இளைஞன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சஜித் என்ற 24 வயது இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக அறியமுடிகிறது. குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. காதல் விவகாரத்தாலேயே அவர் உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.