🔴🇫🇷இல் து பிரான்ஸில் ஊரடங்கு! இன்று தெரியவரும்!!

இன்று வியாழக்கிழமை இல் து பிரான்ஸ் வாசிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகும் நாள் ஆகும்.

பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக Yvelines மாவட்டத்தில் ஒவ்வொரு 100.000 பேரிலும் 265 பேருக்கு தொற்று ஏற்படுகின்றது. அதுவே Seine-Saint-Denis மாவட்டத்தில் ஒவ்வொரு 100.000 பேரிலும் 401 பேருக்கு தொற்று ஏற்படுகின்றது.

அதேவேளை, இல் து பிரான்ஸ் மருத்துவமனையில் உள்ள ‘அவசர பிரிவு’ கட்டில்களில் கிட்டத்தட்ட 75% வீதமானவை நிரப்பப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஒரு இறுக்கமான சூழ்நிலையில், இல் து பிரான்சுக்கு முழுமையான ஊரடங்கு அறிவித்தால் மாத்திரமே கொரோனா வைரசை இல்லாதொழிக்கலாம் என நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மாலை பிரதமர் Jean Castex மற்றும் சுகாதார அமைச்சர் Olivier Véran இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்த உள்ளனர். இந்த சந்திப்பின் போது இல் து பிரான்சுக்குள் கொண்டுவரப்படும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கப்படும் என அறிய முடிகிறது.