🔴🇫🇷இல் து பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாளை புதன்கிழமை இல் து பிரான்சை மிக கடுமையான வெப்பம் தாக்க உள்ளதுடன், சுற்றுச்சூழல் மாசடைவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 ஆம் திகதி நாளை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30°C வெப்பம் இல் து பிரான்சுக்குள் நிலவும். அதேவேளை வளிமண்டலத்தில் அதிகளவு மாசு பரவியிருக்கும் எனவும் Airparif நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தேவையற்று வெளியில் செல்வதை தவிர்ப்பதும், அதிகளவு நீரை பருகுவதும் கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.