⚫🇫🇷இல் து பிரான்ஸிற்குள் புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முக்கிய தீர்மானம்!

புதிய உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தற்போது இல் து பிரான்சுக்குள் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு எத்தனித்து வருவதாக அறிய முடிகிறது. 16 மாவட்டங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உள்ளிருப்பானது, கொரோனா வைரசை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை. கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வெளியே பயணிப்பதற்குரிய கால அவகாசத்திலும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

ஆனால் இல் து பிரான்சுக்குள் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிகளும் முற்றாக நிறைவடைந்தும் உள்ளது. இதானால், சுகாதார பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பான மிக விரைவான படிப்பினை ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அதன் முடிவில் மேலும் இறுக்கமாக கட்டிப்பாடுகளை கொண்ட “உள்ளிருப்பு” ஒன்றை விரைவில் கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிய முடிகிறது. கலாச்சார அமைச்சர் Roselyne Bachelot தொடர்ந்தும் மருத்துவமனையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.