🔴🇫🇷இல் து பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு சுகாதார பணிமனை அவசர கோரிக்கை!

பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் உள்ள சகல மருத்துவ மனைகளுக்கும் சுகாதார பணிமனை அவசர கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இல் து பிரான்ஸ் மருத்துவமனைகளில் உள்ள அவசரப் பிரிவு நிரம்பி வழிகின்றது.

இன்று காலை (மார்ச் 8 ஆம் திகதி) வரை இல் து பிரான்சுக்குள் 973 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலை மிக இறுக்கமாக உள்ளதால், இல் து பிரான்சுக்குள் உள்ள மருத்துவமனைகள் தங்களது வழமையான நடவடிக்கைகளில் 40% வீதமானவற்றை கைவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பிராந்திய சுகாதார பணிமனையான L’Agence régionale de santé விடுத்துள்ளது. 40% வீதமான வழமையான நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, கொரோனா நோயாளிகளுக்கான தேவைகளை பூரணப்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.