🔴 🇫🇷 பரிஸ் இருளில் மூழ்கிஉள்ளது,, காரணம் என்ன???

நேற்று சனிக்கிழமை இரவு பரிசின் பல பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன பல கட்டிடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன நேற்றிரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை பரிசில் உள்ள 300 இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தங்களது விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கின இந்த நிகழ்வை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிட்டத்தட்ட நாடு முழுவதும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டு பெருமளவான நகரங்களில் இந்த இருள் கடைப்பிடிக்கப்பட்டது.

அதிக வெளிச்சத்தினாலும் அதிக மின்சார பயன்பாட்டினாலும் பூமி வெப்படைகின்றது இதனை தவிர்ப்பதற்காக இந்த நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது.

l’Arc de Triomphe, Arc de Triomphe, l’église du Sacré Cœur போன்ற கட்டிடங்களும் l’Opéra Bastille, l’Hôtel de Ville de Paris மற்றும் l’Assemblée nationale ஆகிய வளாகங்களும் இருளில் மூழ்கின மிக முக்கியமான இரும்பு மனுஷியான ஈஃபிள் கோபுரமும் தனது மின்விளக்குகளை அணைத்து ஒருமணிநேரம் இருளில் மூழ்கியது.