ஆன் இதால்கோ “5G” தொழில்நுட்ப விரிவாக்கலுக்கு அனுமதி வளங்கினார்.!!

பரிசில் 5G தொழிநுட்ப விரிவாக்கலுக்கு நகர முதல்வர் ஆன் இதால்கோ அனுமதி அளித்துள்ளார் பரிசில் 5G தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் கொண்டுவருவதற்கு பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் வலுத்திருந்தன.

Orange, SFR போன்ற நிறுவனங்கள் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் இருந்து 5G தொழிநுட்பத்தினை வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்தாலும் அரசு அதற்கு அனுமதி அளிக்க காலம் கடத்திக்கொண்டே வந்தது தொலைத்தொடர்பினால் ஏற்படும் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த அளவீடுகளை National Frequency Agency (ANFR) நிறுவனே பிரான்சுக்கு வழங்கி வருகின்றது.

அதன் தரவுகளை அடிப்படையாக கொண்டே முன்னதாக 4G தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டது இந்நிலையில் தற்போது 5G தொழிநுட்பத்துக்கும் இந்த National Frequency Agency (ANFR) நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையை பரிஸ் நகரசபையிடம் கையளித்துள்ளது அதன் முடிவிலேயே 5G தொழில்நுட்பத்துக்கு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அனுமதி அளித்துள்ளார் இது தொடர்பாக பிரெஞ்சு தொலைத்தொடர்பு கூட்டமைப்பு நிர்வாகியான Nicolas Guérin தெரிவிக்கும் போது முதல்கட்டமாக இல் து பிரான்சுக்குள் நான்கு தொலைபேசி நிறுவனங்கள் இந்த 5G சேவையினை வழங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.