🔴🇱🇰🦠சற்று முன் கிடைத்த செய்தி! யாழில் திடீர் என சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துஒ பீடம் ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி யாழ்.மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் HNB வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில் அவருடைய குடும்பத்தினர் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் நெல்லியடி சந்தை வியாபாரி ஒருவருக்கும், யாழ்.நகரை அண்டிய இராசாவின் தோட்டம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் யாழ்.அச்சுவேலி சந்தை வியாபாரியில் மனைவி ஒருவருக்குமாக யாழ்.மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் கிளிநொச்சி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 2 பேருக்கும் முல்லைத்தீவில் ஒருவருக்குமாக வடமாகாணத்தில் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.