அடுத்தது என்ன?யாழ் பல்கலை துணைவேந்தர் சிறிசற்குணராஜா திடீர் முடிவு…. !!

யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தனது பதவியை துறக்கும் முடிவை எடுத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும், அதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை.

ஆனால் இன்று உள்ள சூழலில் துணைவேந்தரிற்கு பதவி துறப்பதைத் தவிர வேறு வழி இல்லை என பல்கலைகழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வட்டாரங்களிற்குள் மாத்திரமே தற்போது பேசப்பட்டு வருகிறது. சுயாதீனமாக அதை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை.எனினும், சில வட்டாரங்களிற்குள் பேசப்படும் தகவல்களின்படி, பதவி விலகுவது குறித்து சிறிசற்குணராஜா ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பின் பின்னர் சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்களால் அதிகம் அவர் விமர்சிக்கப்பட்டார்.

நினைவுத்தூபி இடிகப்பட்டமை தொடர்பில் உள்நாடு, வெளிநாடுகளில் உள்ளவர்கள் கடுமையான எதிர்பார்ப்பை வெளியிட்டதையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது