🇱🇰 யாழ் பல்கலைக்கழக தனியார் விடுதிக்கு நள்ளிரவு வந்த மர்ம நபரால் பதற்றம்…….!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவிகள் தங்கியிருந்த தனியார் விடுதி ஒன்றுக்கு நள்ளிரவு வந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த 8ஆம் திகதி நள்ளிரவு விடுதி வளாகத்துக்குள் குறித்த நபர் நுழைந்துள்ளார் இதைத் தற்செயலாக அவதானித்த மாணவிகள் கத்திக் கூச்சலிடவே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்த மர்ம மேலாடை இல்லாமல் நுழைந்தமையும் வளாகத்துக்குள் கொடியில் போடப்பட்டிருந்த புத்தகப்பை மற்றும் ஆடைகளை எடுத்துச் சென்றுள்ளமையும் அங்குள்ள கண்காணிப்புக் கருவியில் பதிவாகியுள்ளன.