⚫🇱🇰யாழ் ஆசிரியரின் விபரீத முடிவு! கலங்கி நிற்கும் குடும்பம்!

ஆசிரியை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் இமையாணன் பகுதியைச் சேர்ந்த தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியை திருமதி விஜயசங்கர் சாந்தினி (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கபப்டுகின்ற நிலையில், உறவினர்களால் மீட்கப்பட்டு முச்சக்கர வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை. இதேவேளை குறித்த ஆசிரியை இரு பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.