⚫யாழ் இளைஞனின் தவறான முடிவு! கலங்கி நிற்கும் குடும்பம்!

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சிறுப்பிட்டி தெற்குப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ராஜகோபால் ராஜஜெனோசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் உயிர் இழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.