⚫🇱🇰ஜப்பான் ஆசை😳! இலங்கை பெண்னின் அதிர்ச்சி செயல்!

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இவர் இவ்வாறு பணமோசடி செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜப்பான் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை குறித்து கடுவெல பகுதி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பகுதியைச் சேர்ந்த இருவரின் 8 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபருக்கு எதிராக பண மோசடி குறித்து 32 வழக்குகள் உள்ளதாகவும் 17 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண் தெஹியோவிட பகுதியை பூர்வீகமாக கொண்ட 49 வயதுடையவர் எனவும் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.