🇫🇷 கட்டணமின்றி தொலைபேசி இலக்கம்.!! முதியவர்கள் தடுப்பூசி போடுவதற்கு.!!!!

80 வயதுக்கு மேலுள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு கட்டணமற்ற தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 80 வயக்கு மேலுள்ள முதியவர்களில் 13% வீதமானோர் 500,000 பேர் இதுவரையில் ஒற்றை தடுப்பூசியையேனும் பெற்றுக்கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட தடுப்பூசி போடும் பணி பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் இந்த எண்ணிக்கையிலான முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பது பாரிய பின்னடைவாகும் இதனை சரி செய்யும் பொருட்டு அரசு ஒரு கட்டணமற்ற தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது 0 800 730 957 எனும் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் வாரத்தில் 7 நாட்களும் சேவை இருக்கும் எனவும் அறிவித்துள்ளதுஇந்த இலக்கத்தில் முதியோர் மட்டும் தான் தொடர்புகொள்ளவேண்டும் என்பதில்லை முதியோருக்கு தடுப்பூசி கோரும் அனைவரும் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.