🇫🇷 பிரான்ஸ்ல் கழிவு நீர் மூலமாக தீவிரமாக பரவும் பிரித்தானிய கொரோனா….!!!

இல் து பிரான்சுக்குள் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் பிரித்தானிய பிரிவு கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த கொரோனா தொற்று கழிவு நீரில் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்களின் படி 50% வீதம் கொரோனா வைரஸ் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான ஆய்வை பரிசைச் சேர்ந்த Eau de Paris ஆய்வகம் மேற்கொண்டிருந்தது.

அதன் நிர்வாகி Laurent Moulin இது தொடர்பாக தெரிவிக்கும் போது….

“தொற்று குறைவடையும் எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியவில்லை ஆனால் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது இந்த தொற்று 50% வீதத்தை எட்டியுள்ளது”

என தெரிவித்தார்.