🇱🇰 காமக் கொடுரனின் பிடியில் சிக்கிய 14வயதுச் சிறுமி….!!!

இலங்கையின் அம்பாறை – பொத்துவில் பகுதியில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞரொருவர் தன் காதலியான 14 வயது சிறுமியை அழைத்து கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமப் பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார் குறித்த சிறுமியினை காணவில்லை எனப் பெற்றோர்கள் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.


இந்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாவத்தை மாதிரி கிராமத்தில் 16 வயது பூர்த்தியாகாத சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞரும் சிறுமியும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பொலிஸ் பிரிவின் ஊடாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் .