கனவனுக்காக மனைவியின் தியாகம் இறுதியில் மனைவி சிறையில்……!!!!

ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி தன் கணவரின் குழந்தை ஆசைக்காக கர்ப்பமாக இருப்பதாக கூறி நாடகமாடி குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் ரஷ்யவை சேர்ந்த 33 வயதான டவ்வுட் டுடோவ் திருமணமாகி பல நாட்கள் குழந்தைக்காக காத்திருந்துள்ளார் இந்நிலையில் டுடோவ்வின் மனைவிதான் கர்ப்பமாக இருப்பதாக தன் கணவரிடம் தெரிவித்து தங்கள் சந்தோசத்தை பகிர்ந்துள்ளனர்.

சில நாட்கள் பிறகுதான் தான் கர்ப்பமாக இல்லையென்று டவ்வுட் டுடோவ்வின் மனைவிக்கு தெரியவந்துள்ளது இருப்பினும் கணவரின் ஆசைக்காக கர்ப்பமாக இருப்பது போலவே நடித்துள்ளார் 8 மாதங்கள் கழித்து பிரசவ நேரத்தில் டுடோவ்வின் மனைவி மருத்துவமனையின் அருகே வீடு எடுத்து யாருக்கும் சொல்லாமல் தனியே தங்கியுள்ளார் கணவர் வரும்போது மட்டும் மருத்துவமனையில் இருப்பது போல கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் தன் கணவருக்கு போன் செய்து தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும் ஆனால் அவை தற்போது இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் மேலும் மருத்துவர்கள் உடனடியாக குழந்தைகளை அடக்கம் செய்யவேண்டும் என கூறியதாக அவரின் மனைவி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்த்த டுடோவ் உடனடியாக குழந்தைகள் அடக்கம் செய்யவிருந்த கல்லறைக்கு சென்ற போது வெள்ளை துணியில் போர்த்தியிருந்த இரு குழந்தைககளை பார்த்து அழுதுள்ளார் அதையடுத்து துணியை விலக்கி பார்க்கையில் இரண்டு போர்வைக்குள்ளும் பொம்மைகள் இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார்.

உடனடியாக பொலிசாரை அழைத்த டுடோவ் விசாரணையில் தன் மனைவிதான் குழந்தை பிறந்தது போல நாடகமாடியது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் மேலும் அவரின் மனைவியும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.