கண்டி மாவத்தா மக்கள் பதற்றத்தில் !

ஹோமாகம பகுதியில் சிசிரிவி(CCTV) கமராவில் சிக்கிய அமானுஷ்யம் தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மாவத்தகம பிரதேசத்தில் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்த காட்சி தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கமராக் காட்சியில் அடையாளம் தெரியாத கறுப்பு உருவம் போன்று திடீரென தோன்றியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மாவத்தகம – கண்டி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் சரியான விளக்கம் உரிய முறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான காணொளி சமூக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.