🇫🇷 🔴 காவற்துறையின் பிடியில் 57kg கஞ்சாவுடன் நால்வர் கைது…!!!

காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 57 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் இச்சம்பவம் நேற்று புதன்கிழமை Clichy-sous-Bois (93 ஆம் மாவட்டம்) நகரில் இடம்பெற்றுள்ளது.

GRI அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இந்த போதைப்பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன 44 கிலோ கஞ்சாவும், 13 கிலோ எடையுள்ள சருகு கஞ்சாவும் 3.005 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்க்கப்பட்டுள்ளன.

அத்தோடு 22, 29, 34 மற்றும் 50 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.