🇫🇷கருக்கலைப்புக்கு எதிர்ப்பு …..!!போராட்டத்திற்கு 6000 பேர் வரை பங்கேர்ப்பு !!!

சனிக்கிழமையை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமையும் பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது பரிசின் Place du Trocadéro பகுதியில் குவிந்த சில ஆயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கருக்கலைப்பு செய்வதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது குறிப்பாக கருக்கலைப்பு செய்வதற்குரிய கால எல்லை 12 இல் இருந்து 14 வாரங்களாக அதிகரித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.  

கருக்கலைப்பு செய்வது பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

 இந்த ஆர்ப்பாட்டத்தில் 6000 பேர் வரை கலந்துகொண்டனர் முன்னதாக சனிக்கிழமை காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.