🇱🇰 இலங்கையில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எச்சரிக்கையான செய்தி……!!! (sent with love effect)

இலங்கையில் எதிர்வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தில் நடத்தப்படவுள்ள களியாட்ட நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் காதலர் தின சந்திப்பு கொண்டாடங்களுக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சுகாதார பிரிவின் அனுமதியின்றி சட்டவிரோதமாக அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிகழ்வுக்கு வருகைத் தந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அவர் இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.