யாழ் கைதடியில் கத்தி முனையில் கொள்ளை!

யாழ் கைதடியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் எட்டு மணி அளவில் முகமூடியுடன் வந்த கொள்ளையர்கள் கையில் கொண்டுவந்த வாளை காட்டி இக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இக் கொள்ளையில் பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.