🔴🇫🇷பிரான்ஸ் காவல்துறையினர் மீது வாகன தாக்குதல்!

சிறுவன் ஒருவன் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளான்.

நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Bordeaux (Gironde) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 11 மணி அளவில் (ஊரடங்கு நேரத்தில்) வீதி கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலந்து நாட்டில் பதிவு செய்யப்பட்ட Audi RS3 மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணித்துள்ளது.

மகிழுந்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டும், மகிழுந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதனால் காவல்துறையினர் பெரும் விபத்தினை தவிர்க்கும் முகமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர்.

ஆனால் துரத்திச் சென்ற காவல்துறையினர் மீது மகிழுந்தால் மோத சாரதி முற்பட்டுள்ளான். இதனால் காவல்துறையினர் வேறு வழியில்லாமல் சாரதி நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

மகிழுந்து சாரதி ஒரு 16 வயது சிறுவன் எனவும், அவன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.