⚫🇫🇷 காவற்துறை அதிகாரியின் தொடர் தற்கொலை…!!! மர்மம் தொடர்கதை !!!!!

இது இவ்வருடத்தில் இடம்பெறும் 29 ஆவது காவல்துறை அதிகாரியின் தற்கொலையாகும் ரென் நகர காவல்நிலையத்தில் la police judiciaire அதிகாரியாக பணிபுரிந்துவந்த Éric P. எனும் அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது வீட்டில் வைத்து சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வருடத்தில் இடம்பெறும் 29 ஆவது தற்கொலை இதுவாகும் கடந்த மாதத்தில் Reunion தீவில் உள்ள Saint-Denis நகர காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார் காவல்துறையினரின் தற்கொலையை தவிர்ப்பதற்காக 0800 95 00 17 எனும் தொலைபேசி (காலை 5 – இரவு 11 மணி வரை) இலக்கத்தையும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய 0805 230 405 எனும் தொலைபேசி இலக்கத்தையும் அறிமுகம் செய்திருந்தது.

கடந்த இரு வருடங்களில் பதிவான காவல்துறை அதிகாரிகளின் தற்கொலை எண்ணிக்கையை விட இவ்வருடத்தில் மிக குறைந்த அளவு தற்கொலைகளே பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.