🇫🇷 காவற்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையா …..! ஓல்னே-சூ-புவா காவற்துறையினர் கடும் தாக்குதல் !

செய்ன் சன் துனியின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் CSI 93 படையணியின் இரண்டு உந்துருளிப் படையினர் ஓல்னே-சூ-புவாவில் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

ஓல்னே-சூ-புவாவில் உள்ள cité des 3000 குடியிருப்பிற்கு அருகில் உந்துருளியில் ஊரடங்கு நேரத்தில் திரிந்த இருவரை மறித்து இவர்கள் சோதனை செய்துள்ளனர் Rue Edgar Degas இல் நடத்தப்பட்ட சோதனையில் அந்த உந்துருளியில் வந்தவர்களிடம் எந்தவிதமான ஆவணங்களும் இருக்கவில்லை உந்துருளியை விட்டு விட்டு வீடடிற்குச் சென்று ஆவணங்கள் எடுத்து வருவதாகக் கூறிச் சென்றவர்கள் வரும்போது பதினைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்துள்ளனர்.

வந்தவர்கள் இந்த இரண்டு காவற்துறை வீரர்களையும் கீழே வீழ்த்தி அனைவரும் சேர்ந்து மூர்க்கத்தனமாக அவர்களைத் தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த 40 மற்றும் 29 வயதுடைய இரண்டு காவற்துறையினரும் Robert Ballanger வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்ட விசாரணைகளை ஓல்னே சூ புவா காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.