🔴🇫🇷😳பிரான்ஸில் நடு வீதியில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுக்க காவல்துறை அதிகாரி ஒருவர் உதவியுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை Essonne நகரில் உள்ள Ris-Orangis தொடருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது. காலை 6.45 மணிக்கு அவசர இலக்கமான 17 இற்கு அழைப்பு வந்துள்ளது. பெண் ஒருவர் பிரசவ வலியில் துடிப்பததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 மீற்றர் இடைவெளியில் கடமையில் இருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் வீதியில் வைத்து குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. கடமையில் நின்றிருந்த பெண் காவல்துறையினர் அவருக்கு உதவி செய்தனர். 20 நிமிடங்களில் அவர் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். பின்னர் SAMU குழுவினர் மூலம் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.