பிரான்ஸ் காவல்துறையிடம் 2kg கஞ்சா சிக்கியது..!!!!

Val-d’Oise இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்தது இரண்டுகிலோ கஞ்சா எடுத்துச் சென்றவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார் புதன்கிழமை மாலை Saint-Prix (Val-d’Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

32 வயதுடைய ஒருவர் ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் avenue du Général-Leclerc வீதியில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார் 3.50 மணி அளவில் அவர் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் சிலர் மீது மோதி விபத்துக்குள்ளானார்.

இதில் நால்வர் காயமடைந்தனர் 9 வயதுடைய சிறுமி ஒருவரும் குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியும் பலத்த காயமடைந்தனர் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்து விபத்து தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டனர் அப்போது விபத்தை ஏற்படுத்திய சாரதி தனது மோட்டார் சைக்கிளில் இரண்டு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர் கைது காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மீதமானவர்களுகு சிகிச்சை பெற்று வருகின்றனர்.