🇫🇷 🔴பிரான்சில் பெண் ஒருவர் காவல்துறையினருக்கு கொலைமிரட்டல்.!!!!

காவல்நிலையம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவர் அங்கு அடைத்துவைக்கப்பட்டுள்ள தனது கணவனை உடனடியாக விடுவிக்குமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு Evry (Essonne) நகர காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இரவு 8 மணி அளவில் குறித்த காவல்நிலையத்திற்கு மூன்று பெண்கள் வருகை தந்துள்ளனர் அதில் ஒருவரது கணவன் கைது செய்யப்பட்டு உள்ளே சிறைவைக்கப்பட்டிருந்தான் அவனை உடனே விடுவிக்கக்கோரி குறித்த மனைவி ஆக்ரோஷமாக கத்தியதுடன் இல்லாவிட்டால் காவல்நிலைய வரவேற்பாளர் அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்வேன் எனவும் மிரட்டியுள்ளார்.

ஆனால் அப்பெண்ணின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த காரணத்துக்காக உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் தனது இடுப்பில் கத்தி ஒன்றை மறைத்து எடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.