🔴 🇫🇷 பாரிஸ்ல் காவற்துறை அதிகாரி மீது கத்திக்குத்து…..!!!தாக்கியவர் சம்பவ இடத்தில் சுட்டு கொல்லப்படார்…!!

பரிஸ் இன்று 18 இல் ஒரு காவற்துறை தற்பாதுகாப்பிற்காகத் தனது தப்பாக்கியால் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளார் இந்தக் காவற்துறை அதிகாரியைக் கத்தியால் குத்தித் தாக்குதல் நடாத்தியபோது இந்தக் காவற்துறை அதிகாரி தாக்குதலாளியைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

இன்று 11h00 மணியளவில் பரிஸ் 18 இல் Rue des Amiraux இல் ஈருருளியில் நின்றபடி சக காவற்துறை அதிகாரிகளின் ஈருருளிகளை அவதானித்த படி நின்றுள்ளார் சக காவற்துறை அதிகாரிகள் ஒரு குடும்ப வன்முறையை விசாரிக்க ஒரு வீட்டிற்குள் சென்றிருந்த வேளை இந்தக் காவற்துறை அதிகாரி மீது தாக்குதல் நடாத்த முயன்றுள்ளார் காவற்துறை அதிகாரி தனது இரும்புத் தாக்குதல் பொல்லினால் அவரைத் துரத்த முயன்றுள்ளார்.

ஆனால் வீதியின் சந்திப்பகுதியில் திடீரென காவற்துறை அதிகாரி மீது கத்தியால் குத்த ஆரம்பித்துள்ளார் இதனால் இந்தக் காவற்துறை அதிகாரி அவரை நோக்கித் தன் துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலாளி கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளை காவற்துறையினரின் காவற்துறையினரான IGPN ஆரம்பித்துள்ளனர்.