முஸ்லீம் மதத்தவரை காதலித்ததற்காக பெண் ஒருவரை அவரது பெற்றோர்கள் கொலை செய்தனர்..!!!!

முஸ்லீம் மதத்தவரை காதலித்ததற்காக பெண் ஒருவரை அவரது குடும்பத்தினரே உயிரோடு எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது மேலும் உத்திரபிரதேசம் கோரக்பூரில் உள்ள பெல்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா யாதவ் இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார் இதுதொடர்பாக பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

அத்தோடு அவர்கள் ரஞ்சனா யாதவை அழைத்து அந்த காதலை கைவிடும்படி பெற்றோர்கள் கூறியுள்ளனர் ஆனால் அப்பெண் அதை ஏற்க மறுத்து தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார் மேலும் இந்நிலையில் கடந்த 4ம் திகதி ஜிக்னா (Jigina) பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது மேலும் இதையடுத்து இச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் இறந்தது ரஞ்சனா யாதவ் என அடையாளம் கண்டுபிடித்தனர்.

அத்தோடு நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ரஞ்சனா தனது காதலை விட மறுத்ததால் அவரது குடும்பத்தினரே அவரை உயிரோடு எரித்து கொன்றது தெரிய வந்தது இதையடுத்து அவர்களை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்தனர்.