கொழும்பில் ஒட்சிசன் வாயுவின் திடீர் மாற்றம்.!!!

கொழும்பில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு நகரில் வளி மாசடைதலைத் தடுப்பதற்கு சுற்றாடல் அமைச்சும் கொழும்பு மாநகரசபையும் இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கொழும்பு மாநகரசபையின் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்டவர்கள் அதிகாரிகளுடன் முன்னெடுத்திருந்த கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் ஒட்சிசன் அளவினை நாள் தோறும் அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது கொழும்பு நகரின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு மாநகரசபையின் மேயர் ரோசி அமைச்சரிடம் கோரியுள்ளார்.