🔴 🇫🇷 Seine-et-Marne நகரில் நிகழ்ந்த கொள்ளை ……!!!

நேற்று சனிக்கிழமை Seine-et-Marne நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது இரவு 8 மணி அளவில் Chelles நகரில் உள்ள Leclerc பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் இருவர் அங்கிருந்த ஊழியர்களை ஒரு அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர் பின்னர் அங்காடியை கொள்ளையடிக்க முயன்றனர்.

பணப்பெட்டகம் இருக்கும் அறையை கேட்டு அச்சுறுத்திய போதும் ஊழியர்களை அதை சொல்லவில்லை ஆனால் அதற்குள்ளாக காவல்துறையினர் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

அவர்கள் திருடிச் சென்ற பொருட்கள் அல்லது பணத்தின் பெறுதிகள் தெரிவிக்கப்படவில்லை இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தப்பியோடிய இரு கொள்ளையர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.