🔴 🇫🇷 கொரோனாவின் கோர தாண்டவம் பிரான்சில் …..!!!ஒரே நாளில் பல உயிர்கள் காவுகொண்டது….!!!

பிரான்சில் மூன்றாவது கொரோனா தொற்று அலை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் நாள் ஒன்றில் பதிவாகும் அதிகூடிய தொற்றாக 45,641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரான்சில் மொத்த தொற்று எண்ணிக்கை 4,424,087 ஆக உயர்வடைந்துள்ளது அதேவேளை தீவிர சிகிச்சைப் பிரிவில் இடமே இல்லை எனும் அளவில் nபலத்த நெருக்கடியாக 4,651 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

26,876 பேர் மொத்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணிநேரத்தில் 228 பேர் சாவடைந்துள்ளனர் இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 93,405 ஆக உயர்வடைந்துள்ளது இவர்களில் 68,000 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.