கொரொனாக்கு முற்றுப்புள்ளி..! முதற்தடுப்பூசி செலுத்தபட்டது ! செலுத்தபட்டவரின் நிலை……!

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்களுக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த தடுப்பூசியை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியன் அண்மையில் அனுமதி வழங்கியது.

அதன்படி ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய மூன்று நாடுகளிலும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஜெர்மனியில் 101 வயது நிரம்பிய “எடித் குவாஷிலா “என்ற மூதாட்டிக்கு முதல் நபராக தடுப்பூசி செலுத்தப்பட்டது இறைவனுக்கு நன்றி தெரிவித்த அந்த மூதாட்டி தடுப்பூசி போட்ட போது எந்த வலியும் ஏற்படவில்லை என்றார்.

முதல்கட்டமாக வயதானோருக்கும் முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்னும் சில மணிநேரங்களில் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.