மக்ரோனின் கோரிக்கைக்கு செவிமடுத்த “7” அங்கத்துவ நாடுகள்.!!!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கோரிக்கைக்கு G7 அங்கத்தவ நாடுகள் செவி சாய்த்துள்ளன நேற்று வெள்ளிக்கிழமை வீடியோ மூலமாக G7 அமைப்பைச் சேர்ந்த ஏழு நாடுகளின் ஜனாதிபதிகளும் உரையாடினர் இதில் ஆப்பிரிக்க வறுமை நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக உரையாடினார்கள்.

கொவிட் 19 வைரசில் இருந்து இந்த வறுமை நாடுகள் தங்களை காத்துக்கொள்ளவும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும் இந்த உரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.மொத்தமாக €7.5 பில்லியன் யூரோக்களை வழங்க இந்த G7 நாடுகள் சம்மதித்துள்ளன.

இந்த கோரிக்கையை முதலில் வைத்தது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆவார் நிதி உதவி அல்லது தாம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் 5% வீதமானவையை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க வேண்டும் என மக்ரோன் கோரியிருந்தார் அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.