🇫🇷 🔴பரிசில் பெண் ஒருவர் காவல்துறை வாகனத்தில் குழந்தையை பெற்றெடுத்தாள்..!!!!

பரிசில் பெண் ஒருவர் காவல்துறையினரின் மகிழுந்துக்குள் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தெற்கு பரிசில் இடம்பெற்றுள்ளது.

14 ஆம் வட்டாரத்தின் rue Cabanis வீதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அதிகாலை 4.15 மணி அளவில் அங்குள்ள வீடு ஒன்றில் இருந்து 39 வயதுடைய நபரும் அவருடன் கர்ப்பிணி மனைவியும் வெளியேறினர் மனைவி பிரசவ வலி எடுத்த நிலையில் அருகில் உள்ள l’hôpital Saint-Anne மருத்துவமனைக்கு நடந்து செல்வது அவர்களது நோக்கம்.

இதை பார்த்த காவல்துறையினர் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு தீயணைப்பு படையினர் அழைத்ததோடு குறித்த பெண்ணை காவல்துறையினரின் வாகனத்துக்குள் படுக்க வைத்துள்ளனர் ஆனால் அவருக்கு அதற்கிடையில் குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க தயாரானது.

ஒரு சில நொடிகளில் காவல்துறையினரின் உதவியுடன் அவர் வாகனத்துக்குள்ளேயே குழந்தையை பிரசவித்தார் பின்னர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர் குழந்தையையும் தாயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.