பிரான்சில் குளிர்கால உடை (“SOLDES”) மலிவுவிற்பனை..!!!!!

குளிர்கால மலிவு விற்பனைக்கான கால அவகாசம் மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது பெப்ரவரி இறுதி வரை தீர்மானிக்கப்பட்டிருந்த இந்த மலிவு விற்பனை வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்படுகின்றது.

வணிகர்கள் தங்கள் கைவசம் உள்ள பொருட்களை இந்த காலப்பகுதிக்குள் விற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள 20.000 சதுர மீற்றர் பரப்பளவுக்கு மேலுள்ள கடைகள் நிறுனங்கள் தங்கள் கைவசம் உள்ள பொருட்களை உள்ளூர் வணிகர்கள் மூலம் விற்கவும் முடிவும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை ministère délégué aux PME அறிவித்துள்ளது குளிர்கால மலிவு சந்தை கடந்த ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பித்தது கடந்த 2020 ஆம் ஆண்டில் 12 நாட்கள் முன்னதாக ஜனவரி 8 ஆம் திகதியே ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.