🇫🇷 பிரான்ஸ்ல் அதிகரிக்கும் குழு மோதல்கள்……!!!!நேற்று இருவர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் ..!!

பிரான்ஸ்ல் சிறுவர்களுக்கிடயே இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் நேற்று திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னர் Champigny-sur-Marne நகரில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது.

இரு நகரங்களைச் சேர்ந்த 15 சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கியுள்ளனர் இதில் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளர்.

இருவரும் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.