🔴 🇫🇷 குதிரையிடம் சிக்கிய எட்டு மாணவர்கள் …..!!! அவர்களின் நிலைமை..????

நேற்று வெள்ளிக்கிழமை பகல் 1 மணி அளவில் Saints-en-Puisaye நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இங்குள்ள மழலையர் பாடசாலை ஒன்றின் Moulin de Vanneau எனும் பண்ணையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள்து.

இங்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் வந்திருந்தனர் அப்போது அங்கே நின்றிருந்த குதிரை ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் நின்ற கூட்டத்துக்குள் பாய்ந்தது இதில் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களில் மூவர் படுகாயமடைய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

17 ஆசிரியர் மற்றும் உதவியாளர்களுடன் 23 மாணவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் 14 வயதுடைய குதிரை ஒன்றே அவர்கள் மீது இடித்து தள்ளியுள்ளது.

படுகாயமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவன் எலும்புகள் முறிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.