⚫🇬🇧👮‍♂️லண்டனில் பொலிசாரின் எலும்புகளை உடைத்த ஆர்பாட்டக் காரர்கள்!

பிரித்தானியாவின் பிரிஸ்டல் நடகரில் இடம்பெற்ற ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று மாபெரும் கலவரமாக மாறியுள்ளது. பிரித்தானியாவில் பொலிசாருக்கு புதிதாக பல அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது. அதனை உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் கொண்டு வந்துள்ள நிலையில். சரியான அனுமதி இன்றி நடக்கும் திடீர் போராட்டங்களை பொலிசார் உடனே கட்டுப்படுத்த. இல்லையேல் கலைக்க பொலிசாருக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்பட உள்ளது.

இதனை ஜனநாயக உரிமை மீறல், என்று கூறி “கில் த பில்” அதாவது இந்த அதிகாரத்தை கொல்ல வேண்டும் நடைமுறையில் வரக் கூடாது என்று போராட்டம் நடந்தது. ஆனால் அது திடீரென பெரும் கலவரமாக மாறியதில். 2 பொலிசார் கை எலும்புகள் உடைக்கப்பட்டதோடு. ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையம் ஒன்றையும் அடித்து சுக்கு நூறாக நொருக்கி உள்ளார்கள். மேலும் பல பொலிசார் காயமடைந்து வைத்தியசாலை சென்றுள்ளதாக france seithi இணையம் அறிகிறது.

நடை முறைக்கு வரவுள்ள இந்த சட்டம் தமிழர்களையும் வெகுவாக பாதிக்க உள்ளது. ஏன் எனில் இனி பொலிசாரிடம் அனுமதி இன்றி எந்த ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்த முடியாத நிலை தோன்றவுள்ளது. இதனை ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.