லண்டன் 3ல் இருந்து எச்சரிக்கை 4க்கு செல்கிறது! பிரதமரின் அவசர வேண்டுகோள்!

சற்று முன்னர் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், விடுத்துள்ள அவசர வேண்டு கோள் இதுதான். லண்டன் எச்சரிக்கை சமிஞ்சை 3ல் இருந்து 4க்கு செல்கிறது. மேலும் பலமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. துணிக் கடைகள், சில ஷாப்பிங் சென்ரர்கள் கட்டாயமாக மூடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

முன்னரைக் காட்டிலும் 50% விகிதம் வேகமாக பரவும் புதுவகை கொரோனா தொற்று ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ் மீண்டும் பரிணாம வளர்ச்சி கண்டு, வேகமாக பரவும் உருப்பெற்றுள்ளது. அந்த வகையான கொரோனா வைரஸ் தற்போது லண்டனை தாக்க ஆரம்பித்துள்ளதால், எச்சரிக்கை சமிஞ்சை 4க்கு செல்வதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.