🇱🇰இலங்கை அரசின் புதிய நடைமுறை! அனைத்துவெளிநாட்டினருக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி. வி சானக தெரிவித்துள்ளார்.

பயணிகள் எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனையுடன் வர வேண்டும் என்றும், கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள். சுமார் 10 நாட்களில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையையும் நடத்துவோம். அந்த பி.சி.ஆர் சோதனை எதிர்மறையானது என்பதை உறுதிப்படுத்தினால், நாங்கள் அவர்களை சமூகத்திற்குள் விடுவிப்போம், என்று அவர் கூறினார்.