தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள இடங்கள் இதோ…!!

நாட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

இதன்படி எஹலியாகொட, பாணந்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை சனிக்கிழமை அதிகாலை 5 மணிதொடக்கம் ஊரடங்குச் சட்டம் அங்குநீக்கப்படவுள்ளது.

எஹலியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மின்னாக, போவத்தெல்ல, விலேகொட, அஸ்கங்குல, யக்குதாகொட ஆகிய கிராம சேவகப் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீங்குகின்றது.

பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 675 தொடவத்த கிராம சேவகப் பிரிவிலு்ம நாளை அதிகாலை 5 மணிதொடக்கம் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ளது.

இதேவேளை களுத்துறை பேருவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யக்கொட, கிழக்கு மற்றும் மக்கொன மேற்கு ஆகிய பகுதிகளும் நாளையதினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.