⚫😲பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு! 20,000 அகதிகளுக்கு அடைக்கலம்!

20,000 ஆப்கான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப் போவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஆப்கானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் ஆப்கான் மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் 20,000 அகதிகளுக்கு இங்கிலாந்தில் அடைக்கலம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து படைகளுக்கு உதவிய மொழி பெயர்ப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.