⚫பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவலின் படி கோவிட் தொற்றி 28 நாட்களுக்குள் 140 பேர் உயிரிழந்துள்ளார்கள் மற்றும் 38,281 தொற்றுகள் பதிவாகி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கோவிட் பாதிப்பின் முழு விபரம் பின்வருமாறு: பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் 140 பேர் பலியாகி உள்ளார்கள். இதன் காரணமாகக் கொரோனா வைரஸ் தாக்கி 28 நாட்களுக்குள் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 132,143 ஆக உள்ளது. கடந்த 7 நாட்களில் 770 பேர் பலியாகி உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 14.2% விகிதம் அதிகரித்துள்ளது.

இதேவேளை பிரித்தானியா மேலும் 38,281 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,628,709 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது இந்த வாரம் தொற்றுகள் 11.1% விகிதம் அதிகரித்து உள்ளது.

26 ஆகஸ்ட் 2021 வெளியிட்ட தகவலின் படி இதுவரை 47,860,628 பேருக்குத் முதல் தடுப்பு மருந்தும் 42,234,417 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 90,095,045 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுளள்ளது. பிரித்தானியாவின் சனத்தொகை 2019 இன் மத்தியில் 66.8 மில்லியனாக ஆக இருந்தது. இதற்கிணங்க தற்பொழுது ஏறக்குறைய 71.647 விகிதத்துக்கு மேலான மக்களுக்கு முதல் தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளது.