லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை! எரிக்கும் டார்ச் பாவித்து பெரும் மோசடி!

தற்போது லண்டனில் முன் எப்பொழுதும் இல்லாதவாறு பெரும் கார் கொள்ளைகள் இடம்பெற்று வருகிறது. இதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வந்துள்ள றொமேனியர்கள் ஆகும். இவர்களில் பலர் தற்போது நாடு திரும்ப உள்ளதால், கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஓடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

டார்ச் லைட் போன்ற உருவத்தில் உள்ள சிறு குழல் ஒன்றை கதவில் வைக்கிறார்கள். அது அப்படியே அலுமீனியக் கதவுகளை கூட, துளையிடுகிறது. இதனூடாக சிறிய நீண்ட கம்பியை உள்ளே செலுத்தி, கார் சாவிகளை திருடுகிறார்கள். இல்லையென்றால் வீட்டின் உள்ளே வந்து கார் சாவிகளை எடுத்து காரை ஓட்டிச் சென்றுவிடுகிறார்கள்.

இந்த டார்ச் லைட் போன்ற உருவத்தில் உள்ள, சிறிய குழாய் அதிக வெப்பம் காரணமாக எதனையும் உருக்க வல்லது. இதனால் எந்த ஒரு ஓசையும் இன்றி கதவில் துளை போட்டு காரை களவாடிச் செல்கிறது இந்த றொமேனியக் கூட்டம். தமிழர்களே மிகவும் ஜாக்கிரதை.