பேய்களின் நகரமாக மாறிய லண்டன்! இந்தியாவின் புதிய தடை!

பல ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்கு வர முடியாது என்று அறிவித்துள்ள நிலையில். இந்தியாவும் பிரித்தானியாவுக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா செல்ல இருந்த அனைத்து விமானங்களும் ரத்தாகியுள்ளதாக சற்று முன்னர் செய்திகள் வெளியகியுள்ளது.

படு வேகமாக பரவக் கூடிய ஒருவகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில், அதுவும் குறிப்பாக லண்டனில் பரவி வருகிறது. தற்போது லண்டன் மத்திய நகரப் பகுதிகள் எல்லாம் பேய் நகரமாக மாறியுள்ளது. எவரும் அங்கே செல்லவில்லை. மக்கள் வெளியே செல்வதை கடுமையாக தவிர்த்து வரும் நிலையில், ரயில் சேவைகள் பல இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

உலகில் மொத்தமாக 40 நாடுகள் பிரித்தானியாவை தடை செய்துள்ளது. இதனால் சற்று முன்னர் 200 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, கிறிஸ்மஸ் தினத்தில் வேறு நாடுகளுக்கு செல்ல என இருந்த பல ஆயிரம் மக்கள் விமான நிலையத்தில் காத்து இருக்கிறார்கள்.