🔘பிரித்தானிய சட்டவிரோத பயணம்! வெளியான அதிர்ச்சி புள்ளிவிபரம்!

பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்ளும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

828 பேர் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் பிரித்தானியா நோக்கி ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்துள்ளனர். நாள் ஒன்றில் பதிவான அதிகபட்ச பயணம் இதுவாகும். இதற்கு முன்னதாக நாள் ஒன்றில் பயணம் மேற்கொண்ட அதிகதிகளின் எண்ணிக்கை 592 பேராக இருந்ததது. அதேவேளை, கடந்த வருடத்தில் மொத்தமாக 8.000 பேர் சட்டவிரோத பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையை இவ்வருடம் எப்போதோ கடந்துவிட்டது.

இவ்வருடத்தில் இதுவரை 12.400 பேர் பிரித்தானியா நோக்கி படையெடுத்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 300 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.